ஜப்பானில் சுமார் ஒன்றரை மாதமாக அமலில் இருந்த நாடு தழுவிய நெருக்கடி நிலை அந்நாட்டு அரசால் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 7ம் தேதி முதல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு தழுவிய நெருக்கடி நிலை அமலில் இருந்தது. இக்காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது.
இதையடுத்து 5 பிராந்தியங்களை தவிர்த்து எஞ்சிய பிராந்தியங்களில் நெருக்கடி நிலை படிப்படியாக வாபஸ் பெறப்பட்டது. தற்போது எஞ்சிய 5 பிராந்தியங்களிலும் நெருக்கடி நிலையை திரும்பப் பெற்றுள்ளது. நாட்டு மக்களின் சிறந்த ஒத்துழைப்பால், 6 வாரங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டதாக பிரதமர் ஷின்சோ அபே கூறியுள்ளார்.