ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பைச் சேர்ந்த மேலும் 900ம் பேரை விடுவிக்க அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அந்நாட்டு தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர், 900ம் கைதிகளை விடுவிக்க இன்று விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு இந்த எண்ணிக்கை மாறுபடலாம் எனவும் தெரிவித்தார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை தாலிபான் பயங்கரவாதிகள் 3 நாள் சண்டை நிறுத்தத்தை அறிவித்தனர்.
அதற்காக நேற்று முன்தினம் பக்ராம் சிறையில் இருந்து 100 தாலிபான் கைதிகளை அரசு விடுதலை செய்தது. முன்னதாக ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்கு கொண்டுவர சிறைகளில் உள்ள 5 ஆயிரம் தாலிபான் தீவிரவாதிகளை விடுவிக்க அந்நாட்டு அதிபர் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.