அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில் இன்று ஏவப்படும் ராக்கெட்டில் 2 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட உள்ளனர்.
புளோரிடாவில் உள்ள கென்னடி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணியளவில் ஃபால்கன் 9 ராக்கெட் ஏவப்படுகிறது. ராக்கெட்டை ஏவுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாசாவைச் சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய 2 வீரர்கள் ஃபால்கன் 9 ராக்கெட்டில் பயணிக்க உள்ளனர்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்வது இதுவே முதன்முறையாகும்.
2011ல் இருந்து நாசா தன்னுடைய விண்வெளி ராக்கெட் மூலம் மனிதர்களை அனுப்புவது இல்லை என்பதும், ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலமே வீரர்களை அனுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.