உலகமே கொரோனாவால் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் போருக்குத் தயார்நிலையில் இருக்கும்படி தனது ராணுவத்தினருக்கு கட்டளையிட்டுள்ளார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.
உலகம் முழுவதும் மூன்றரை லட்சம் பேரை பலி கொண்டுள்ள கொரோனா வைரசுக்கு சீனாதான் காரணம் என்று அமெரிக்கா பகிரங்க குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான சொற்போர் வலுத்துள்ளது. இன்னொரு புறம் இந்திய எல்லையில் சீனா தனது படைகளைக் குவித்திருப்பதால் இந்தியாவும் படைபலத்தை அதிகரித்து வருகிறது. இதனால் லடாக் எல்லைக் கோடு அருகே கடந்த 22 நாட்களாக பதற்றநிலை நீடித்து வருகிறது. சீனப்படைகளும் இதுவரை பின்வாங்குவதாக தெரியவில்லை.
கொரோனா வைரசால் உலகமே ஆடிப்போயிருக்கும் நிலையிலும் படைகள் தயார் நிலையில் இருக்கும்படி சீன அதிபர் ஜின்பிங் கட்டளையிட்டுள்ளார். சீன அதிபர் மக்கள் விடுதலை ராணுவத்தின் கூட்டத்தில் உரையாற்றும் போது ராணுவத்தை பலப்படுத்தி போருக்குத் தயாராக இருக்கும்படி கூறியதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.