அமெரிக்காவின் நோவாவேக்ஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம், மனிதர்கள் மீதான கொரோனா தடுப்பூசி பரிசோதனையை, முதல் கட்டமாக தொடங்கியுள்ளது.
NVX-CoV2373 என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக, நோவாவேக்ஸ் நிறுவனம் கடந்த ஏப்ரலில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், அந்த தடுப்பூசியை முதல் கட்டமாக மனிதர்கள் மீது பரிசோதிக்க தொடங்கியுள்ளதாக நோவாவேக்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த பரிசோதனையில், தடுப்பூசியின் திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து வரும் ஜூலையில் முதல் கட்ட முடிவுகள் கிடைக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து மனிதர்கள் மீதான இரண்டாம் கட்ட பரிசோதனை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடத்தப்பட உள்ளதாகவும் நோவாவேக்ஸ் குறிப்பிட்டுள்ளது.