ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்தை கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்துவது தொடர்பான ஆய்வை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் மருத்துவ இதழான லான்செட்டில் (Lancet) வெளியான ஆய்வு முடிவுகளின் படி கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுப்பது அவர்களை மரணத்துக்கு இட்டுச் செல்லும் வாய்ப்புகளையும் ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை உலக சுகாதார நிறுவனம் சார்பிலான ஆய்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அதன் தலைவர் டெட்ரஸ் அதனாம் ஜெப்ரெயேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துக்கு ஆதரவாக உள்ள நிலையில், பிரான்ஸ் மருத்துவர் ஒருவரும் இந்த மருந்து சிறப்பான பலனை அளிப்பதாக தொடர்ந்து கூறி வருகிறார்.