கொரோனாவை முன்னிட்டு நாடு முழுதும் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலையை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 7 ஆம் தேதி ஜப்பானில் அவசர நிலையை அவர் பிறப்பித்தார். அது பின்னர் நாட்டின் பலபகுதிகளில் விலக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் படிப்படியாக துவக்கப்பட்டன.
கடந்த ஒன்றரை மாதமாக ஜப்பான் எடுத்த கட்டுப்பாட்டு நடவடிக்கை காரணமாக தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர், கொரோனாவுக்குப் பிந்தைய புதிய சமூக, பொருளாதார நடவடிக்கைகளை ஜப்பான் துவக்க உள்ளதாக கூறி உள்ளார்.
பொருளாதாரத்தை சீரமைக்க நிவாரண திட்டங்களை உள்ளடக்கிய துணை பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜப்பானில் 16,650 பேருக்கு தொற்று பரவியதில் 820 பேர் அதற்கு பலியாகினர்.