ஸ்பெயினில் ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கியுள்ள பிரபல ஓவியர் ஒருவர், தனது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளில் வரைந்துள்ள ஓவியங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
பெஜக் என அறியப்படும் சில்வெஸ்டர் சாண்டியாகோ (Silvestre Santiago) எனும் அந்த ஓவியர், சமூக வலைதளங்களில் தனது ஓவியத்தின் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அதனை பார்த்தவர்களும் அதே போல் ஜன்னல் கண்ணாடிகளில் ஓவியம் வரைந்து அந்த ஓவிய கலைஞருக்கு அனுப்பி வருகின்றனர். ஊரடங்கால் முடங்கியுள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல பொழுது போக்காக அமைந்துள்ளது.