வட கொரியாவின் அணு ஆயுத வலிமையை அதிகரிப்பதற்கு அதிபர் கிம் ஜாங் உன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
வட கொரியத் தலைநகர் பியாங்யாங்கில் மத்திய ராணுவ ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது.
அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமெரிக்காவுடனான அணுஆயுத ஒழிப்பு பற்றிய பேச்சு நின்றுபோன நிலையில், அணு ஆயுத வலிமையை அதிகரிக்கும் கொள்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிற நாடுகளின் அச்சுறுத்தலைச் சமாளிக்கும் வகையில் படை வலிமையையும் ஆயுதங்களையும் பெருக்கிக் கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களாகக் கிம்மின் உடல்நலம் பற்றிப் பல்வேறு செய்திகள் வந்த நிலையில் அவர் முதன்முறையாக ஓர் அலுவல் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.