அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள அமேசான் தலைமையக அடுக்குமாடி கட்டிடங்களில் ஒன்று, வீடற்றவர்களுக்கான தங்குமிடமாக மாற்றிமையக்கப்பட்டுள்ளது.
சியாட்டில் உள்ள 63 ஆயிரம் சதுர அடியில் 8 மாடிகள் கொண்ட கட்டிடத்தின் ஒரு பாதியில் அமேசான் அலுவலகமும் மற்றொரு புறம் வீடற்றவர்களுக்கான தங்குமிடமும் அமைக்கப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் மேரிஸ் பிளேஸ் இணைந்து திறந்துள்ள இந்த முகாமில், 50 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் தனிநபர் இடைவெளியை பின்பற்றி வசித்து வருகின்றனர்.