எச் 1 பி விசா வழங்குவதில் அமெரிக்காவில் கல்வி பயின்ற வெளிநாட்டவருக்கு முன்னுரிமை வழங்கும் மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
எச் 1 பி மற்றும் எல் 1 விசா சீர்திருத்தச் சட்டம் என்னும் பெயரில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையிலும் மேலவையிலும் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. எச் 1 பி விசா வழங்குவதில், அமெரிக்காவிலேயே கல்வி பயின்ற வெளிநாட்டவருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அந்த மசோதாவில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவில் கல்வி பயிலும் சிறந்த, திறன்வாய்ந்த மாணவர்கள் அதிக ஊதியத்தில் நல்ல வேலைவாய்ப்பு பெற இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அமெரிக்கப் பணியாளர்களுக்குப் பதில் அந்த இடத்தில் எச் 1 பி விசா பெற்ற வெளிநாட்டவர்களைப் பணியமர்த்துவதையும், தடுக்க வகை செய்யப்பட்டுள்ளது.