வினாடியில் ஆயிரம் எச்டி திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் வகையில் அதிவேக இன்டர்நெட் வசதியை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
மோனாஷ், ஸ்வின்பேர்ன் மற்றும் ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, வினாடிக்கு 44 புள்ளி 2 டெராபிட் இணைய வேகத்தை பதிவு செய்துள்ளார்கள். கண்ணாடி சிப்பில் வழக்கமாக பயன்படுத்தப்படும் 8 லேசர்களுக்கு பதிலாக மைக்ரோ காம்ப்((micro comb)) என்று அழைக்கப்படும் புதிய சாதனத்தை பொருத்தி, உலகின் இந்த அதிவேக இணைய வசதியை உருவாக்கி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.