ரமலான் (Eid)பண்டிகையின்போது தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்படாது என்று சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் அறிவித்துள்ளன.
ரமலான் பண்டிகை 25ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஏற்கெனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த மூடப்பட்ட மசூதிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும், ஆதலால் வீடுகளிலேயே முஸ்லிம்கள் தொழுகை நடத்தி கொள்ள வேண்டுமென சவூதி அரேபியா அரசு கூறியுள்ளது.
அதேநேரத்தில் மெக்கா, மெதினா புனித மசூதிகளில் இமாம்கள் மட்டும் தொழுகை நடத்துவார்கள் எனவும் அறிவித்துள்ளது. இதேபோல் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டு அரசும், ரமலான் தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்படாது என அறிவித்துள்ளது.