உலகமே கொரோன அச்சுறுத்தலில் இருக்கும்போது சில ஆப்பிரிக்க நாட்டு மக்கள் முப்புறமும் இயற்கையான தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில மாதங்களாக லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் உணவு தானியங்களை அழித்ததால் பெரும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.
கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத இழப்பு ஏற்படும் என்றும், வரும் காலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ள நிலையில், சில நாடுகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை பெருவெள்ளத்தால் பேரிழப்பைச் சந்தித்துள்ளன. மற்றொரு புறம் கொரோனா மற்றும் பொதுமுடக்கத்தின் காரணமாக உலகில் 5ல் ஒரு பங்கு மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.