கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தங்கள் இரண்டாம் கட்ட ஆய்வேட்டை தாக்கல் செய்துள்ளனர்.
அடுத்த கட்டத்திற்கு தங்கள் ஆய்வு நகர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மனிதர்களுக்கு மருந்து பரிசோதிக்கும் இந்த முயற்சியில் பத்தாயிரம் பேருக்கு தடுப்பு மருந்து சோதிக்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக உடல் ஆரோக்கியமுடைய 55 வயதுக்குட்பட்ட ஆயிரம் பேருக்கு மருந்துகள் பரிசோதிக்கப்பட்டன.இரண்டாம் கட்டத்தில் 70 வயது வரையிலான முதியோருக்கும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் இந்த மருந்தை பரிசோதிக்க உள்ளனர். இந்த மருந்து குரங்குகளுக்கு பரிசோதிக்கப்பட்ட போது நல்ல பலனைத் தந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.