கொரோனா பாதிப்பின் எதிரொலியாக இந்த ஆண்டு தனது ராணுவ செலவினத்தை 6.6. சதவிகிதம் என்ற அளவுக்கு மட்டுமே உயர்த்தியுள்ளதாக சீன அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ராணுவ கொள்முதல், கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட செலவினங்களில் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக 2 ஆம் இடத்தில் சீனா இருக்கிறது.
இந்த நிலையில் கொரானாவால் சீனப் பொருளாதாரம் 6.8 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தாலும், கடந்த ஆண்டு 7.5 சதவிகிதமாக இருந்த ராணுவ செலவின வளர்ச்சி இந்த ஆண்டு புள்ளி 9சதவிகிதம் என்ற அளவிற்கு மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வலிமையை காட்டும் அடையாளமாக ராணுவம் இருக்க வேண்டும் என்ற அதிபர் ஜி ஜின்பிங் கொள்கைக்கு ஏற்ப நெருக்கடியான சூழலிலும் ராணுவ செலவினம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் சீனாவின் உண்மையான ராணுவச் செலவு பல மடங்கு இருக்கும் எனவும் அதை சீனா வெளிக்காட்டுவதில்லை எனவும் துறை சார்ந்த வெளிநாட்டு வல்லுநர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.