இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள மிருகக் காட்சி சாலையில் இருக்கும் ஒகாபி விரைவில் தனது குட்டியை ஈனும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விலங்கு வரிக்குதிரை மற்றும் ஒட்டகச் சிவிங்கியின் கலவையாக தோற்றமளிக்கும். தற்போது கர்ப்பமாக இருக்கும் ஒகாபியின் வயிற்றில் இருக்கும் அதன் குட்டியின் துடிப்பு காமிராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கோ குடியரசை பூர்வீகமாகக் கொண்டுள்ள இந்த ஒகாபியின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக இந்த மிருக காட்சி சாலை பூட்டப்பட்டுள்ளதால் கர்ப்பமாக இருக்கும் ஒகாபியை அங்குள்ள ஊழியர்கள் கண்ணுங்கருத்துமாக கவனித்து வருகின்றனர்.