இங்கிலாந்தில் கடல் நீர் சூடானதால் நீருக்கடியில் உள்ள பவளப்பாறைகள் தங்கள் நிறங்களை வண்ணமயமாக மாற்றி உள்ளன.
பவளப்பாறைகளில் காணப்படும் ஒரு செல் உயிரினங்கள் தங்களுக்குத் தேவையான சூரிய ஒளியைப் பெறவும், அதிக வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும் அவ்வப்போது கடல் பாசிகள் பல்வேறு நிறங்களை உமிழ்ந்து வருகின்றன.
இந்நிலையில்தான், கடல் நீர் அதிக வெப்பமானதால் அதனடியில் இருந்த பவளப்பாறைகள் வெளுப்பாக மாறத் தொடங்கின. இதனால் அந்தப் பாறைகள் இறக்கும் தருவாய்க்குச் சென்றதன் காரணமாக பாசிகள் இதுபோன்ற நிறங்களை உமிழ்ந்து பவளப்பாறைகளை காப்பாற்றுவதாக சவுத்ஹாம்ப்டன் பல்கலைக்கழக பேராசிரியர் சிசிலியா டி ஏஞ்சலோ தெரிவித்துள்ளார்.