உலக சுகாதார அமைப்பு தனது நிதி ஆதாரத்தை மேம்படுத்தி வருவதாக அதன் பொதுச் செயலாளர் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆண்டுக்கு 2 புள்ளி 3 பில்லியன் டாலர் வருமானத்தில் உலகம் முழுவதும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது சவாலான விஷயம் என்று குறிப்பிட்டார். நிதி தொடர்பாக தற்போது உலக சுகாதார அமைப்பு சந்தித்து வரும் சவால்கள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக சீனாவில் இருந்து தொடங்கி உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு தவறான தகவல்களைத் தந்ததாகக் கூறி அதற்கு அளிக்கப்பட்ட நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.