கொலம்பியா தலைநகர் போகோடாவில் (BOGOTA) பொதுவெளியில் நடமாடுவோருக்கு அதிகபட்ச உடல்வெப்ப அளவு உள்ளதா என்று கண்காணிக்கும் பணியில் டிரோன்களை போலீஸார் பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் யாருக்கும் உடல் வெப்ப அளவு அதிகமாக இருக்கும்பட்சத்தில், அவர்கள் இருக்கும் இடம் குறித்த தகவலை டிரோனில் இருக்கும் தொழில்நுட்பம், மருத்துவ குழுவுக்கு அனுப்பி வைக்கும். அதைபெற்று மருத்துவ குழுவினர் விரைந்து வந்து அவர்களிடம் மருத்துவ பரிசோதனையை நடத்துவார்கள்.
மேலும் ஊரடங்கை மீறி வெளியே வருபவர்கள் குறித்த தகவல்களையும் டிரோன் கேமரா மூலம் அதிகாரிகள் தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.