மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயினை தான் ஆதரிப்பதாலேயே அதற்கெதிரான விமர்சனங்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை ஊழியர்கள் இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்காப்புக்காக மலேரியா தடுப்பு மருந்தை தான் உட்கொள்வதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதற்கு மருத்துவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கடும் விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் இது குறித்து பேசிய அதிபர் ட்ரம்ப், மலேரியா மருந்தை சாப்பிடுவது தனது தனிப்பட்ட முடிவு என தெரிவித்துள்ளார்.
மேலும் இது சக்திவாய்ந்த மருந்து எனக் கூறியுள்ள அவர், எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என்றும், தனக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவர்கள் தான் இந்த மருந்துக்கெதிரான கருத்துகளையும் கூறி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.