அமெரிக்காவின் லாகூனா கடற்கரையோரத்தில் நூற்றுக்கணக்கான டால்பின் மீன்கள் சுற்றித் திரிந்த காட்சி வெளியாகியுள்ளது.
சுறா போன்ற கொடிய மீன்களிடம் இருந்து தப்பிக்க கூட்டமாக வாழும் தன்மையை கொண்டவை டால்பின் மீன்கள். அத்தகைய கூட்டத்தை சேர்ந்த டால்பின் மீன்கள் நூற்றுக்கணக்கில் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லாகூனா கடற்கரை பகுதிக்கு 16ம் தேதி வந்தன. பின்னர் கடற்கரையோரத்தில் வாழும் மீன்களை அவைகள் உணவாக விரட்டி பிடித்து தின்றன. இந்த காட்சி, அங்குள்ள நியுபோர்ட் கோஸ்டல் அட்வென்சர் சுற்றுலா அமைப்பால் படம்பிடிக்கப்பட்டு சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.