விலை குறைவான, இரண்டே மணி நேரத்தில் தொற்றை கண்டுபிடிக்கக்கூடிய கொரோனா சோதனை கிட்டை உருவாக்கி உள்ளதாக, அர்ஜென்டினா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நியோகிட்-கோவிட் 19 என பெயரிடப்பட்டுள்ள இந்த கிட்டில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளதாக இதை உருவாக்கிய அர்ஜென்டினாவின் பாப்லோ காஸோ பவுண்டேஷன் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த சோதனை கிட்டின் விலை இந்திய மதிப்பில் சுமார் 600 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிகவும் இலகுவாக இந்த சோதனை கிட்டுகளை பயன்படுத்த முடியும் என்றும் வெளிநாடுகள் கேட்டுக்கொண்டால் அதிக எண்ணிக்கையில் இதை தயாரித்து வழங்க தயார் என்றும் அர்ஜென்டினாவின் அறிவியல்-தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரோபர்ட்டோ சால்வைரசா தெரிவித்துள்ளார்