அடுத்த 30 நாட்களுக்குள் சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து வெளியே வருவதுடன், கொரோனா நிலவரத்தை திறமையாக சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளா விட்டால், அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ள நிதியுதவி நிரந்தரமாக நிறுத்தப்படும் என, அதிபர் டிரம்ப் , WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று பரவியதை மறைத்து சீனாவுக்கு சாதமாக செயல்பட்டது என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியுதவியை டிரம்ப் நிறுத்தி வைத்தார். இந்த நிலையில், 30 நாட்கள் கெடு வழங்குவதாகவும் அதற்குள் பாரபட்சமின்றி செயல்பட துவங்கினால் நிதி உதவி மீண்டும் வழங்கப்படும் என உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குநருக்கு அனுப்பிய கடிதத்தை டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இல்லையெனில் அந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்ளும் என்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்திருக்கிறார்.