அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குக் கொடுத்துச் சோதித்துப் பார்த்ததில் சாதகமான முடிவு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்து அதற்கு மருந்து கண்டுபிடிக்கப் பல்வேறு நிறுவனங்கள் ஆய்வை மேற்கொண்டு வருகின்றன. நூற்றுக்கு மேற்பட்ட மருந்துகளைக் கண்டுபிடித்து மருத்துவமனையில் நோயாளிகளுக்கும், உடல்நலமிக்க ஆட்களுக்கும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வகையில் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள மருந்தை உடல்நலமிக்க தன்னார்வலர்கள் 8 பேருக்குக் கொடுத்துச் சோதித்துப் பார்த்துள்ளனர். இதில் குறிப்பிடத் தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், சாதகமான முடிவு கிடைத்துள்ளதாகவும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.