அர்ஜென்டினாவில் 70மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் எலும்பு கூடுகளை பல்லுயிரியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வகை டைனோசர்கள் மெகராப்டர் வகையை சேர்ந்தவை என்றும் பூமியில் வசிக்கும் டைனோசர்களில் கடைசி இனத்தை சேர்ந்தவை என்றும் கருதப்படுகிறது. தெற்கு மாகாணமான சாந்தாகுரூசில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த டைனோசர் 32அடி உயரம் கொண்டவையாகும்.
இந்த மெகராப்டர் இன டைனோசர் மெலிதான உடலமைப்பு , நீண்ட வால்கள் உடையதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவற்றின் கட்டை விரல்கள் 40சென்டிமீட்டர் நீளத்திற்கு இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த எலும்புக்கூடுகளை ஆராய்ச்சி செய்வதன் மூலம் மெகராப்டர் வகை டைனோசர்கள் பற்றிய பல்வேறு விவரங்கள் தெரிய வரும் என்றும் தெரிவித்தனர்.