கொரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கடந்த ஒரு வாரமாக தான் எடுத்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னைப் போலவே முன்கள பணியாளர்கள் பலரும் இந்த மருந்தை எடுத்துக் கொள்வதாகவும், எவ்வளவு பேர் இதனை பயன்படுத்துகிறார்கள் என தெரிந்தால் வியப்புக்குள்ளாவீர்கள் எனவும் கூறினார். வெள்ளை மாளிகையின் மருத்துவ ஆலோசகர் பரிந்துரைக்காத போதும், அதனை எடுத்துக் கொள்வது குறித்து ஆட்சேபம் ஏதும் கூறவில்லை எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதனாலேயா தனக்கு அறிகுறிகள் இல்லை என்றும், பரிசோதனை முடிவுகளும் தொடர்ந்து எதிர்மறையாக வருவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதாலும், கொரோனாவுக்கெதிராக குறிப்பிடத்தக்க பலன்களை அளிக்கவில்லை என்றும் மருத்துவ வல்லுநர்கள் பலரும் மலேரியா தடுப்பு மருந்தை பயன்படுத்த வேண்டாம் என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.