உலகம் முழுவதும் சுமார் 19 லட்சத்து 7 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு 92 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 600 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி, பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேநேரம், அந்நாட்டில் உயிரிழப்பு 92 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பெரும் பாதிப்பை சந்தித்து வரும் ரஷியாவில் ஒரேநாளில் மட்டும் 8 ஆயிரத்து 926 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. எனவே, ரஷியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 300 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இங்கிலாந்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 711 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 160 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயினில், 2 லட்சத்து 78 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட, இங்கிலாந்தில் 2 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.
இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பாதிப்பு, கணிசமாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48 லட்சத்து 90 ஆயிரத்தை தாண்டி விட்டது. அதேநேரம், உயிரிழப்பு, 3 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்துள்ளது. சுமார் 44 ஆயிரம் பேர் கவலைக்கிடமான நிலையில் இருக்க, 19 லட்சத்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர்.