ஊரடங்கால்,காற்று மாசு கணிசமாக குறைந்ததை தொடர்ந்து,200 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை வீட்டில் இருந்தே காணும் அற்புத வாய்ப்பை காத்மாண்டு மக்கள் பெற்றுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய மலைச்சிகரமான எவரெஸ்ட் நேபாளம் வழியாக செல்லும் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது. நேபாளத்தின் தலைநகரமான காத்மாண்டுவில் இருந்து இருநூறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த சிகரம் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஊர் மக்களுக்கு பளிச் என்று தெரியும் வகையில் காட்சியளிக்க துவங்கி உள்ளது.
இந்த காட்சியை வெளியிட்டுள்ள நேபாளி டைம்ஸ் பத்திரிகை, ஊரடங்கால் நேபாளம் மற்றும் வட இந்தியாவின் காற்று மாசு பல மடங்கு குறைந்துள்ளதே இந்த காட்சித் தெளிவுக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளது.