கொரோனா நோய்த் தொற்றினால் ஸ்பெயினைப் பின்னுக்குத் தள்ளி ரஷ்யா 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கடந்த சில நாட்களாக ரஷ்யாவில் ஒரு நாளின் சராசர பாதிப்பு விகிதம் 10 ஆயிரமாக இருந்து வருகிறது. கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்த அதிபர் புதின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் அங்கு நேற்றைய கணக்கீட்டின்படி, 9 ஆயிரத்து 700 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 81 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 600ஐக் கடந்துள்ளது. நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிகை தொடர்ந்து உயர்ந்தால் ஸ்பெயினை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.