நேபாளத்தில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவு இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டில் பெரும் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்தனர். அங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் இருந்தது.
இதையடுத்து துணைப் பிரதமர் ஈஸ்வர் போகரேலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் பொதுமுடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அடுத்த மாதம் 2ந் தேதி தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.