கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இங்கிலாந்து அரசு மேலும் 84 மில்லியன் பவுண்டு நிதியை ஒதுக்கியதாக அறிவித்துள்ளது.
லண்டனில் செய்தியாளர்களிடம் பிரிட்டன் வர்த்தக அமைச்சர் ஆலோக் சர்மா இதனை அறிவித்துள்ளார். அடுத்த சில மாதங்களுக்குள் மருந்தை கண்டுபிடித்து விடும் அளவுக்கு அந்நாட்டில் ஆய்வுகள் தீவிரம் அடைந்துள்ளன.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு ஒன்று AstraZeneca மருந்து நிறுவனத்துடன் பல்வேறு கட்டமாக பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. செப்டம்பர் மாதத்திற்குள் 30 மில்லியன் டோஸ் மருந்து தயாராகி விடும் என்றும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்