கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல உலக நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு ஆய்வு நடத்தி வரும் நிலையில், உலகின் முன்னணி சிகரெட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ, புகையிலை புரதத்தில் இருந்து தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
லண்டனில் இருக்கும் இந்த நிறுவனம், தான் உருவாக்கியுள்ள தடுப்பூசி, மருத்துவமனை சோதனைக்கு முந்தைய கட்டத்தில் உள்ளதாகவும், எப்போது வேண்டுமானாலும் மனிதர்களிடம் அதை பரிசோதிக்கலாம் என்றும் கூறியுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறையின் அனுமதி கிடைத்தால் மனிதர்களிடம் சோதனை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள இந்த நிறுவனம், வாரத்திற்கு 10 லட்சம் முதல் 30 லட்சம் தடுப்பூசிகள் வரை தயாரிக்க முடியும் எனவும் கூறியுள்ளது.