கொரோனா நோயால் தங்கள் நாட்டில் பாதிக்கப்பட்டோர் அனைவரும் குணமடைந்து விட்டதாகவும், ஏப்ரல் 12ம் தேதிக்கு பிறகு யாருக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை எனவும் கம்போடியா நாடு தெரிவித்துள்ளது.
கம்போடியாவில் 122 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு 121 பேர் பலகட்டங்களாக குணமடைந்தனர். 36 வயது பெண் மட்டும் சிகிச்சை பெற்ற நிலையில், அவரும் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினார்.
இதையடுத்து இந்த அறிவிப்பை கம்போடியா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க கம்போடியா சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.