கவுதமாலா நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தொலைக்காட்சியில் பேசிய அந்நாட்டு அதிபர் அலிஜான்டிரோ ஜியாமத்தேய் இது ஒரு கடினமான சூழ்நிலையில் எடுக்கப்பட்ட முடிவு என்றார். ஊரடங்கின் போது மக்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு, குடிநீர், மருந்தங்கள், எரிவாயு, மின்சாரம், தொலைபேசி ஆகியவை தொடர்பான வாகனங்கள் மட்டும் சாலையில் செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிவியாவில் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 29பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்து 518பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.