தங்களது நாட்டில் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக ஸ்லோவேனியா அறிவித்துள்ளது.
அந்நாட்டில் வைரஸ் தொற்றினால் ஆயிரத்து 465 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் ஜானெஸ் ஜான்சா விடுத்துள்ள அறிக்கையில், ஸ்லோவேனியா ஐரோப்பாவில் மிகச் சிறந்த தொற்றுநோய் தடுப்பு நிலைமையை பின்பற்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தற்போது அங்கு பெருமளவு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன, மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து நுழையும் மக்கள் இனி கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் கட்டுக்குள் வந்ததால் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கும் அந்நாட்டு எல்லைகளைத் திறந்து விட்டுள்ளது.