ஆப்கன் தலைநகர் காபூலில் மகப்பேறு மருத்துவமனை மீது தாக்குதல் நடைபெற்றதில் உயிரிழந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு தன்னார்வல பெண்கள் பாலூட்டினர்.
கடந்த 12ந்தேதி தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி, துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 குழந்தைகள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர். சர்வதேச மனித அமைப்பு சார்பில் நடத்தப்படும் இந்த மருத்துவமனை 100 படுக்கைகளைக் கொண்டதாகும். தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
மகப்பேறு மருத்துவமனையில் நடத்தப்பட்ட கொடரத் தாக்குதலுக்கு அதிபர் அஷ்ரப் கானி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.