வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்க அறிவுறுத்தியதை தொடர்ந்து, நம்போ நகரில் உள்ள விவசாயிகள், இயந்திரங்கள் மூலம் வயல்களில் நாற்று நடும் பணியை தீவிரப் படுத்தியுள்ளனர்.
அவர்களை, வட கொரிய அரசின் கொள்கை பரப்பு குழுவினர், பாட்டு பாடி உற்சாகமூட்டினர். அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டதால், வட கொரியா மீது பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், அதிபர் கிம் ஜாங் உன், உணவு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், தற்சாற்பு பொருளாதாரத்தை அடைய முடியும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.