கோமாவில் இருந்து எழுந்து நபர், தனது மனைவி கொரோனாவால் மரணடைந்ததை கேட்ட சோகத்தில் தனது உயிரையும் விட்ட நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது.
மேரிலாண்ட் மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்த 69 வயதான லாரன்ஸ் நோக்ஸ், கொரோனா தொற்றால் கடும் மூச்சுதிணறலுக்கு உள்ளாகி கோமா நிலைக்கு சென்றார். இதைத் தொடர்ந்து அவரது மனைவி மினெட் நோக்ஸ்க்கும் நோய் தொற்று ஏற்பட்டு கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி உயிரிழந்தார்.
அதற்கு அடுத்த 3 நாட்களில் கோமாவில் இருந்து மீண்ட நோக்ஸ், தனது மனைவி உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். மனைவியை இழந்த சோகத்தில் முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாத நோக்ஸ், ஏப்ரல் 15 ஆம் தேதி மரணமடைந்தார்.