உருகுவே கடல்பகுதியில் சிக்கித் தவிக்கும் பயணக் கப்பலில் இருந்து 86பேர் கொரோனா காரணமாக மான்டிவீடியோவில் தரை இறக்கப்பட்டனர்.
ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு சொந்தமான கிரேக் மோர்டைமர் என்ற பெயர் கொண்ட அந்த கப்பலில் 128பேர் உள்ளனர். அந்த கப்பல் தனது பயணத்திட்டப்படி தற்சமயம் ஸ்பானிஷ் துறைமுகமான லாஸ் பால்மாஸ்சுக்கு சென்றிருக்க வேண்டும்.
ஆனால் கொரோனா காரணமாக கடந்த மார்ச் 27ந்தேதி முதல் உருகுவே கடல் பகுதியில் நின்றவாறு உள்ளது. இந்நிலையில் கப்பலில் பயணம் செய்தவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று தாக்கி இருப்பதால் அவர்களை மான்டிவீடியோவில் இறக்க முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கப்பலில் இருந்த பெரும்பாலானவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.