கொரோனா தடுப்பு மருந்து ஆய்வுத் தரவுகளை சீனா ஹேக்கிங் செய்து திருடுவதாக அமெரிக்கா சந்தேகம் தெரிவித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளும் தனியார் நிறுவனங்களும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் போட்டியில் இறங்கியுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் சீன அரசின் ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் கொரோனா தடுப்பு மருந்து ஆய்வுத் தகவல்களை திருட முயற்சிப்பதாக அமெரிக்க உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ. சந்தேகம் தெரிவித்துள்ளதாக வால்ஸ்ட்ரீட் மற்றும் நியூயார்க் டைம்ஸ் இதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக எஃப்.பி.ஐ.யும், அமெரிக்க உள்துறையும் இணைந்து உலகநாடுகளுக்கு அதிகாரபூர்வ எச்சரிக்கை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவை கூறியுள்ளன.