கொரோனா பாதிப்பின் விளைவாக, அமெரிக்காவின் முக்கிய ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒன்று விமானப் போக்குவரத்து துறையில் இருந்தே காணாமல் போய் விடும் என போயிங் தலைவர் டேவிட் காஹவுன் கூறி இருக்கிறார்.
வரும் செப்டம்பர் மாத வாக்கில் இது நடக்கும் என்று அமெரிக்க தொலைக்காட்சியான என்பிசிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட பிறகும், விமான போக்குவரத்து 100 சதவிகிதம் நடக்காது என்ற அவர் 25 சதவிகிதம் என்ற அளவுக்குகூட அது இயல்பு நிலைக்கு திரும்பாது என கணித்துள்ளார்.
போயிங்கின் 747 மேக்ஸ் விமானங்கள் ஓராண்டிற்கும் மேலாக முடக்கப்பட்டுள்ளதால் அந்த நிறுவனம் பெரிய சிக்கலில் உள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் முடங்கியுள்ள போயிங்கின் வியாபாரம், ஆண்டு இறுதியில் 50 சதவிகிதம் என்ற அளவுக்கு சீரடையும் என டேவிட் காஹவுன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.