அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நிருபர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு செய்தியாளர் சந்திப்பில் இருந்து பாதிலேயே வெளியேறினார்.
வாஷிங்டன் நகரில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, மற்ற நாடுகளை காட்டிலும் கொரோனா வைரசை அமெரிக்கா சிறப்பாக கட்டுப்படுத்தி வருவதாக அமெரிக்கா கூறிவரும் நிலையில் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழப்பது ஏன் என்று அதிபர் ட்ரம்பிடம் பெண் நிருபர் வெய்ஜியா ஜியாங் கேள்வி எழுப்பினார்.
பல்வேறு நாடுகளிலும் உயிரிழப்புகள் நிகழ்வதாக பதிலளித்த ட்ரம்ப், இது குறித்து சீனாவிடம் கேளுங்கள் என கூறினார். ஆனாலும் அந்த பெண் செய்தியாளர், விடாமல் கேள்விகளை அடுக்கியதால், செய்தியாளர் சந்திப்பில் இருந்து அதிபர் டிரம்ப் பாதியிலேயே வெளியேறினார்.