கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதையை நிலைமை இன்னும் 2 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்னசொட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பெருந்தொற்று குறித்து ஆய்வு நடத்தியது. அதன் முடிவின்படி, சார்ஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ்களிடையே வேறுபாடு காணப்பட்டாலும், தொற்றுநோய்களுக்கு இடையே நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக விஞ்ஞானிகள் மேற்குறிப்பிட்ட இந்த வைரஸ்கள் முக்கியமாக சுவாசப்பதை வழியாகப் பரவுவதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள், மற்ற வைரஸ்களை விட கொரோனா வைரசின் இனப்பெருக்க வேகம் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். எனவே இந்த வகை வைரஸ்கள் 18 முதல் 24 மாதங்கள் வரை நீடித்திருக்கும் என்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.