உலக அளவில் கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில் இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி ரஷ்யா மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
அந்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 656 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதோடு, 94 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 21 ஆயிரத்தை கடந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 2009 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அந்நாட்டில் கொரோனாவின் மையமாக கருதப்படும் மாஸ்கோவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ்கோவில் மட்டும் 1 லட்சத்து 15 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஊரடங்கு நிலவரம் குறித்து அதிபர் புதின் ஆய்வு செய்யவிருந்த நிலையில், ரஷ்யா 3ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.