ஆஸ்திரேலியாவில் தனது காலை கடித்த சுறாவை கைகளால் குத்து விட்டு அலையேற்ற வீரர் உயிர் தப்பினர்.
விக்டோரியாவில் உள்ள பெல்ஸ் கடற்கரை அருகே அலையேற்ற வீரர்கள் 2 பேர் கடலில் நீச்சலடித்துக்கொண்டிருந்தபோது, அவர்களுக்கு பின்புறம் ஒரு சுறா உலாவியதன் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், அலையேற்ற வீரர்களில் ஒருவரான பிரான்ஸைச் சேர்ந்த டிலான் நகாஸ், தனது காலை கடித்த சுறாவை 2 முறை கைகளால் குத்தி காயத்துடன் உயிர்தப்பினார்.
இதையடுத்து, வலியால் டிலான் கூச்சலிடுவதைக் கண்டு அருகில் இருந்த மற்றொரு வீரர் மீட்டு, பத்திரமாக கரை சேர்த்தார்.