மெக்சிகோ மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வேளையிலும் அன்னையர் தினத்தில் தமது தாய்மார்களை மதிக்கவும் வணங்கவும் தவறவில்லை.
மாரியாச்சி என்ற பாரம்பரிய கொண்டாட்ட முறை ஒன்று மெக்சிகோவில் உள்ளது. பேண்டு வாத்தியங்களுடன் தாயாரை போற்றி இசைத்து மலர்தூவி அன்னையருடன் சமைத்து உண்பது இதன் வாடிக்கை.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக பேண்டு வாத்திய இசை செல்போன் வழியாக பதிவு செய்யப்பட்டு இணையம் வழியாக அனுப்பப்பட்டது. கரிபால்டி சதுக்கத்தில் அன்னையருக்கு பரிசுகளை வாங்கிச் சென்ற பலர் இந்த ஆண்டு பார்ட்டி கிடையாது என்று தெரிவித்தனர்.
பரிசுகளும் மலர்களும் தந்துவிட்டு வருவதாக கூறினர்.உணவகங்களில் பார்சல் மட்டும் கிடைப்பதால் உணவுப் பொருட்களையும் பொட்டலம் கட்டி அன்னையருக்கு தந்தனர்.