பொலிவியாவில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு வாழ்வா சாவா என்ற பிரச்சினை.
லத்தின் அமெரிக்க நாடுகளில் மிகவும் ஏழை நாடான பொலிவியாவில் ஊரடங்கு காரணமாக புகழ் பெற்ற எல் ஆல்ட்டோ நகர சந்தைகள் வெறிச்சோடின. ஆனால் வேலை செய்யாவிட்டால் வருவாய் இல்லை என்ற நிலையால் வீட்டுக்குள் முடங்க முடியாத தொழிலாளர்கள் மற்றும் சிறுவியாபாரிகள் உயிரைப்பணயம் வைத்து தொழிலுக்கு தயாராகி விட்டனர்.
வீட்டில் முடங்கியிருக்கும்படி கோரிய அரசின் அறிவிப்பை புறக்கணித்த ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டுள்ளனர்.இறைச்சி முதல் மீன் வரை பழம் முதல் காய்கறிகள் வரை விற்பனை சூடுபிடித்துள்ளது.பொலிவியாவில் இதுவரை கொரோனாவால் 100 பேர் உயிரிழந்துவிட்டனர். 2400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்