ஏப்ரல் 3ஆம் தேதிக்குப் பிறகு, சீனாவில் ஊகான் நகரில் இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதன் முதலாக கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்ட இந்த நகரில் மொத்தம் 50,334 பேருக்கு தொற்று பரவி அனைவரும் குணமடைந்து விட்டதாக சீன அரசு தெரிவித்திருந்தது.
76 நாள் நீண்ட ஊரங்கிற்குப் பிறகு கடந்த மாதம் 8 ஆம் தேதி ஊகான் நகரில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு எல்லைகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் ஊகானில் மீண்டும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் மனைவி மற்றும் இதர 5 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.