ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தில், ஆளுநர் மாளிகை முன் நடந்த கலவரத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். கொரோனா நிவாரணப் பொருட்களை, பொதுமக்களுக்கு பகிர்ந்தளிப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாக, 300க்கும் மேற்பட்டோர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர்.
அவர்களை காவல்துறையினர் தடுத்ததை தொடர்ந்து, இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. போலீசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் சராமாரியாக கற்களை வீசியதால், போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த சம்பவத்தில் போலீசார் இருவரும், பொதுமக்கள் 4 பேரும் கொல்லப்பட்டதாக கோர் மாகாண செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.